×

விநாயகர் சதுர்த்தி எதிரொலி: ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை

தேனி: ஆண்டிபட்டி சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.800 விலை போவதால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள கண்ணியபிள்ளைப்பட்டி, ராஜதானி, தெப்பம்பட்டி, பலகொம்பு உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை பூ அதிகளவில் சாகுபடியாகிறது. இங்கு பறிக்கப்படும் மல்லிகை பூக்கள் ஆண்டிபட்டி, தெப்பம்பட்டி சாலையில் உள்ள மலர் சந்தையில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மலர் சந்தைக்கு மல்லிகை வரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும், முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி எதிரொலியாகவும் மல்லிகை பூவின் விலை திடீர் ஏற்றம் கண்டுள்ளது. சாதாரண நாட்களில் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே ஏலம் போகும் மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை ஏலம் போவதால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில தினங்களுக்கு பூக்களின் விலை ஏற்றத்தில் இருக்கும் என்று தெரிவிக்கும் ஆண்டிபட்டி வியாபாரிகள் குறிப்பாக மல்லிகை பூவின் விலை பன்மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றன.

The post விநாயகர் சதுர்த்தி எதிரொலி: ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturti ,Jasagi ,Andapatti ,antipatti ,Vinayakar Chaturti ,Antippati ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி...